×

எஸ்சி, எஸ்டி தலைவர்களுடன் மல்லிகார்ஜுன கார்கே கலந்துரையாடல்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறை சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. கூட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் எஸ்சி துறை தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் தலைமை தாங்கினார். தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் எஸ்சி துறை தேசிய தலைவர் ராஜேஷ் லிலோத்தியா, திருநாவுக்கரசர் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்று ஒடுக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய சமுதாய மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து அவர்களோடு விவாதித்தார்.

அப்போது மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், “சமுதாயத்தில் எந்த ஒரு நன்மையும் நடைபெற, ஒருவரையொருவர் தூண்டிவிட முயலாமல், மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு ஆதரவாக ஒன்றுபட்டு நடப்பது முக்கியம். நாம் அனைவரும் பவுத்தர்களாகப் பிறந்த இந்த மண்ணின் பூர்வீகக் குடிமக்கள், இது எங்களுடைய இடம். எனவே நாங்கள் ஏன் எங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்?” என்றார்.

ராஜேஷ் லிலோத்தியா பேசுகையில், “காங்கிரஸ் கட்சிக்கும், எஸ்சி துறையால் மேற்கொள்ளப்படும் சிவில் சமூக ஆர்வலர்களுக்கும் இடையே தொடர்ச்சியான உரையாடல்களை நடத்தும் இந்த முயற்சி காங்கிரஸ் திட்டங்களின் ஒரு பகுதியாக இருந்ததில்லை. நமது அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதும், மனுவாதிகளை எதிர்த்துப் போராடுவதுமே இதன் நோக்கம்” என்றார். கலந்துரையாடலில் டாக்டர் உமாபாலன், துகினா சந்திரசேகர், நிலவன், சுமித்தா மைக்கேல் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Mallikarjuna Karke ,SC , Mallikarjuna Karke discussion with SC, ST leaders
× RELATED விசாரணை அமைப்புகளை தவறாக...