×

ஆளுநர் விவகாரம் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் நல்ல முடிவு எடுப்பார்: அமைச்சர் நம்பிக்கை

புதுக்கோட்டை: ஆளுநர் விவகாரம் தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் நல்ல முடிவு எடுப்பார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று அளித்த பேட்டி: குட்கா வழக்கில் உச்சநீதிமன்றம் தனது கடமையை செய்து கொண்டுள்ளது. வழக்கை அவர்கள் எடுத்து உள்ளனர். நோட்டீஸ் கொடுக்க வேண்டியது அவர்கள் கடமை. அதனை கொடுத்துள்ளனர். ஆளுநரோடு கருத்து மோதல் வேண்டாம் என்ற மனப்பான்மையோடு இருப்பதால் அமைதியான போக்கை முதல்வர் கடைப்பிடித்து வருகிறார். அதே வேளையில் மற்ற மாநிலங்களில் வரும் தீர்ப்பு தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாட்டுக்கும் பொருந்தும். ஆளுநர் விவகாரத்தில் குறிப்பிட்ட காலம் தான் பொறுக்க முடியும். கால அவகாசம் பார்த்துக் கொண்டுள்ளோம். விரைவில் அமைச்சரவை கூடுகிறது. அப்போது ஏதேனும் முடிவுகள் எடுக்க முடிந்தால் தமிழ்நாடு முதலமைச்சர் நல்ல முடிவை எடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Chief minister , Chief minister will take good decision in cabinet meeting on governorship issue: Minister confident
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்