×

'MSME Connect 2023'தொழில் கண்காட்சி மற்றும் விற்பனையாளர் மேம்பாட்டு நிகழ்ச்சி சென்னையில் தொடங்கியது

சென்னை: MSME Connect 2023 தொழில் கண்காட்சி மற்றும் விற்பனையாளர் மேம்பாட்டு நிகழ்ச்சி சென்னையில் தொடங்கியது. இன்று 03.03.2023, சென்னை, கிண்டி, சிட்கோ தலைமை இடத்தில் தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் ‘FaMe TN’ நிறுவனம் மற்றும் ஒன்றிய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையும் இணைந்து விற்பனையாளர் மேம்பாட்டிற்காக 2 நாட்கள் நடைபெறும் MSME Connect 2023 தொழில் கண்காட்சி மற்றும் விற்பனையாளர் மேம்பாட்டு நிகழ்ச்சியை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் வி. அருண் ராய்,  துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், சுமார் 30 பெரிய அரசு நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் பங்கேற்றன. பெரிய அளவிலான அலகுகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களான AVNL, OCFAV, BHEL, ரயில்வே துறை, ஆண்ட்ரூ யூல், சென்னை போர்ட் டிரஸ்ட், VOTPA, ICF, AAI, CMRL, MFL, CPCL, IOCL, BEL, DCIL, NLC, Balmer, Lawrie and Co. Ltd, TIIC, FaMe TN, TANSIDCO, KVIC, NSIC மற்றும் TNPCB, CPCB, BIS, EPFO போன்ற ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பங்கேற்றன.

இந்நிகழ்ச்சியில் தொழில் வணிக ஆணையர் சிஜிதாமஸ் வைத்யன், சிட்கோ மேலாண்மை இயக்குநர் மதுமதி, CPCLஇயக்குநர் எஸ். கிருஷ்ணன், சென்னை விமான நிலைய இயக்குநர் சரத் குமார்,  AVNL மேலாண்மை இயக்குநர் சஞ்சய் திவேதி, MSME இணை இயக்குநர் சுரேஷ் பாபுஜி, FaMeTN பொது மேலாளர் சு. சக்திவேல், TANSTIA தலைவர் மாரியப்பன், FASII தலைவர் கார்த்திகேயன் மற்றும் பல்வேறு பொதுத்துறை  நிறுவனங்களின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Tags : Chennai , 'MSME Connect 2023' industry fair and vendor development program kicks off in Chennai
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...