×

சேந்தமங்கலம் ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள்: முதல் மாட்டை அடக்கிய வீரருக்கு தங்க காசு அளித்து பாராட்டினார் அமைச்சர் உதயநிதி..!!

நாமக்கல்: சேந்தமங்கலம் ஜல்லிக்கட்டில் முதல் மாட்டை பிடித்து அடங்கிய மாடுபிடி வீரருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தங்கக்காசு பரிசளித்து பாராட்டினார். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே மாப்பிள்ளையான் தோட்டம் பகுதியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது வாடிவாசல் வழியாக 400 காளைகள் சீறிப்பாய்ந்தன. அவற்றை 300 காளையர்கள் தீரத்துடன் அடக்கினர். ஜல்லிக்கட்டு போட்டியை கேலரியில் அமர்ந்து ரசித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதல் மாட்டை பிடித்து அடங்கிய மாடுபிடி வீரருக்கு தங்க காசை பரிசளித்து பாராட்டினார்.

தொடர்ந்து வெற்றிபெற்ற காளைகளுக்கும் அவற்றை அடக்கிய வீரர்களுக்கும், தங்கம், வெள்ளி நாணயங்கள், மிதிவண்டி, கட்டில், பீரோ, மிக்சி உட்பட ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. ஆரணி அருகே ராட்டினமங்கலத்தில் அனுமதியின்றி நடைபெற்ற எருதுவிடும் திருவிழாவில் காளை முட்டியதில் படுகாயமடைந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று முன்தினம் நடந்த எருதுவிடும் போட்டியில் முதியவர் உட்பட 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி முதியவர் சின்னக்குழந்தை இன்று மரணமடைந்தார்.


Tags : Sendamangalam Jallikattu Match ,Minister ,Udhayanidhi , Sendhamangalam Jallikattu, Bulls, Gold Coin, Minister Udayanidhi
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பில் தமிழர்களை...