அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நீர்வளத்துறையின் அனைத்து மண்டல ஆய்வுக்கூட்டம்

சென்னை: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நீர்வளத்துறையின் செயல்பாடுகள், துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் மற்றும் 2023 - 2024ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் புதிதாக செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் சரபங்கா திட்டம், தாமிரபரணி - கருமேனியாறு இணைப்புத்திட்டம், அத்திக்கடவு அவினாசி திட்டம், மற்றும் காவிரி - குண்டாறு இணைப்புத்திட்டம் போன்ற பல்வேறு முக்கிய திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் அப்பணிகளை விரைவில் முடிப்பது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

மேலும், முதற்கட்டமாக பக்கிங்காம் கால்வாயின் மத்திய பகுதி புனரமைப்பு பணிகள் உடனடியாக தொடங்கவும், நடைபெற்று வரும் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடித்திட வேண்டுமென்று அமைச்சர் தெரிவித்தார். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் உடனடியாக செயல்படுத்துவதற்கு ஏதுவாக திட்டமதிப்பீடுகளை தயார் செய்யுமாறு அமைச்சர், அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் சந்தீப் சக்சேனா, நீர்வளத்துறை அரசு கூடுதல் செயலாளர் இரா. கண்ணன், காவிரி தொழில்நுட்பக் குழுத்தலைவர் ஆர். சுப்பிரமணியன், நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் திரு. கு.இராமமூர்த்தி, திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் ச.இராமமூர்த்தி, சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் ஜி. முரளிதரன், கோயம்புதூர் மண்டல தலைமைப் பொறியாளர் பி. முத்துசாமி, மதுரை மண்டல தலைமைப் பொறியாளர் எஸ். ஞானசேகரன், திட்ட உருவாக்கம் தலைமைப் பொறியாளர் சி. பொன்ராஜ் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: