கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!!

ராமேஸ்வரம்: கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரு ஜபமாலை, திருச்சிலுவை பாதை, தியானம், நற்கருணை ஆராதனை ஆகியவை நடைபெறுகிறது. அந்தோனியார் கோயில் திருவிழாவில் 2,406 இந்திய பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.

கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக புனித அந்தோணியார் திருவிழாவில் பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் இன்று அந்தோணியார் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இதில் தமிழகம் மற்றும் இலங்கையை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்த புனித அந்தோணியார் திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 5 மணி துவங்கி வெளியூர் மற்றும் உள்ளூர் பக்தர்கள் ஏராளமானோர் ராமேஸ்வரம் துறைமுகத்தில் கூடினர். பின் கச்சத்தீவிற்கு பயணிகளை ஏற்றி செல்ல அனுமதிக்கப்பட்ட படகின் வரிசைப்படி பக்தர்கள் சோதனை செய்யப்பட்டு படகுகளில் புறப்பட்டு சென்றனர்.

இரவு 7 மணிக்கு மின் அலங்காரத்துடன் கூடிய தேரில் அந்தோனியாரின் வீதியுலா நடைபெற உள்ளது. நாளை காலை இலங்கை ஆயர்கள் நடத்தும் ஆராதனை நிகழ்வில் சிங்கள மொழியில் கூட்டுப்பிரார்தனை நடைபெற உள்ளது. நாளை காலை 7.30 மணிக்கு திருவிழா நிறைவாக திருச்செப மாலையும், திருப்பலியும், கொடியிறக்கமும் நடைபெறும்.

Related Stories: