புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் பாதுகாப்பாக இல்லை என்பதை காட்டவே போலியான வதந்தி பாஜகவினர் பரப்புகின்றனர்: பீகார் துணை முதல்வர்

பாட்னா: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் பாதுகாப்பாக இல்லை என்பதை காட்டவே போலியான வதந்திகளை பரப்புவதே பாஜகவின் வேலை. இதுபோன்ற சம்பவம் நடந்தால் எங்கள் அரசும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்கும் என பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படும் வீடியோக்களை பீகாரைச் சேர்ந்த ஒருவர் வெளியிட்டுள்ளார், ஆனால் இது போலியானது என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக  டி.ஜி.பி. சைலேந்திரபாபு வெளியிட்ட வீடியோவில்:

சமூக வலைதளங்களில் 2 போலி வீடியோக்கள் பரவி வருகிறது. அந்த வீடியோக்கள் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல காட்டப்பட்டுள்ளன. அந்த வீடியோக்கள் தவறானவை, போலியானவை. இரு வீடியோக்களும் ஏற்கனவே முன்பு நிகழ்ந்த இருவேறு சம்பவங்களை திரித்து வெளியிடப்பட்டுள்ளன. இதில் ஒரு வீடியோ திருப்பூரில் பீகார் தொழிலாளர்கள் இரு பிரிவாக மோதிக் கொண்டது ஆகும். மற்றொரு வீடியோ கோவையில் உள்ளூர்வாசிகள் மோதிக் கொண்டது ஆகும். இதுதான் உண்மை.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுகிறது. பொதுமக்கள் யாரும் போலியான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டார் என அவர் கூறியிருந்தார்.

தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல் இரண்டு வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன, இரண்டுமே போலியானவை; புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் பாதுகாப்பாக இல்லை என்பதை காட்டவே இது செய்யப்பட்டுள்ளது. போலியான வதந்திகளை பரப்புவதே பாஜகவின் வேலை. இதுபோன்ற சம்பவம் நடந்தால் எங்கள் அரசும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்கும் என பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: