குப்பை கிடங்கில் 3வது நாளாக பற்றி எரிந்த தீ: புகைமூட்டத்தால் வாகன ஓட்டிகள் திணறல்

நாகர்கோவில்: வலம்புரிவிளை குப்பை கிடங்கில் 3வது நாளாக தீ எரிந்தது. தீயை அணைக்கும் பணியில்  தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். நாகர்கோவில் பீச் ரோடு வலம்புரிவிளை குப்பை  கிடங்கில், கடந்த 28ம் தேதி காலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ  மளமளவென பரவி குப்பை கிடங்கு முழுவதும் பற்றியது. நாகர்கோவில், கன்னியாகுமரி, திங்கள்சந்தை, குளச்சலில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்தனர். அவர்கள் மாவட்ட தீயணைப்பு அதிகாரி சத்யகுமார், உதவி தீயணைப்பு அதிகாரி இமானுவேல் ஆகியோர் தலைமையில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.  மேயர் மகேஷ், ஆணையர் ஆனந்தமோகன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு விரைவில் தீயை அணைக்க வலியுறுத்தினர்.

நேற்று 3வது நாளாக குப்பை கிடங்கில் வேகமாக தீ பரவியது. காற்று அதிகமாக வீசியதால், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க  சிரமப்பட்டனர். தீயால் அந்த பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சியளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.  மாநகராட்சி மற்றும் தனியார் லாரிகள் என ெமாத்தம் 10 வாகனங்களில் தண்ணீர் எடுத்து வந்து தீயை அணைக்கும்  பணி நடக்கிறது. தீ விபத்து காரணமாக அருகில்  உள்ள தனியார் பள்ளிக்கு நேற்று 3வது நாளாக விடுமுறை விடப்பட்டது.

Related Stories: