புவனேஸ்வர் - புனே சென்ற விமானத்தின் மீது பறவை மோதியதால் அவசரமாக தரையிறக்கம்

புவனேஷ்வர்: புவனேஸ்வரில் இருந்து புனே சென்ற விமானத்தின் மீது பறவை மோதியதால், அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனேவை நோக்கி ஏர் ஏசியா விமானம் புறப்பட்டு சென்றது. சிறிது நேரத்தில் அந்த விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியது. இதனால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக உடனடியாக அந்த விமானம் மீண்டும் புவனேஸ்வரில் உள்ள பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இதுகுறித்து விமான ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘புனே புறப்பட்டு சென்ற ஏர் ஏசியா விமானத்தின் மீது பறவை மோதியதால், அந்த விமானம் உடனடியாக புவனேஸ்வர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் பரிசோதிக்கப்பட்டது. அனைத்து பயணிகளும் நலமாக உள்ளனர். சில மணி நேரங்களுக்கு பின்னர் அந்த விமானம் மீண்டும் இயக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: