×

காரிப் பருவ நெல் கொள்முதலால் 1 கோடி விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: இலையுதிர் காலமான கார் பருவம் (Kar Season) வேளாண் வழக்கு கார் பட்டம் என்பது தென்னிந்திய மாநிலங்களான தமிழ் நாடு மற்றும் பாண்டிச்சேரி விவசாய நிலங்களில், நெல் விதைப்பு, அல்லது நடவு தொடங்கும் காலத்தையும், மற்றும் சாகுபடி கால அளவையும் குறிக்கும் நெல் பருவமாகும். கார் நெல் (Kar) புல் வகையை சேர்ந்த ஒரு தாவரமான இது, பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றாகும்.

அதிக மழை நீர் தேங்கும் பள்ளமான நிலங்களில் சாகுபடி செய்யக்கூடிய ஒரே இரகமாக உள்ள இந்த கார் நெல், பாரம்பரிய நெல்லில் நடுத்தர இரகமாகவும் மத்திய கால பயிராகவும் விளங்குகிறது. ஒரு ஏக்கருக்கு குறைந்தது இருபத்தி நான்கு மூட்டைவரை மகசூல் கிடைக்கக்கூடிய இந்த நெல் வகை, இரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் இதற்குத் தேவையின்றி, இயற்கையில் கிடைக்கும் சத்துகளைக்கொண்டு செழித்து வளரக்கூடியது

காரிப் பருவ நெல் கொள்முதலால் 1 கோடி விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர் என்று ஒன்றிய அரசு கூறியுள்ளது. 2023 மார்ச் 1-ம் தேதி வரை 713 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நெல் கொள்முதலுக்கு ஆதார விலையாக விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.1.46 லட்சம் கோடி செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய போதிய அளவு அரிசி கையிருப்பு மத்திய தொகுப்பில் வைக்கப்பட்டுள்ளது.

கே எம் எஸ் 2022-2023-க்கான காலகட்டத்தில் கரீஃப் பருவ நெல் கொள்முதல் மூலம் 1 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளனர். அவர்களிடமிருந்து 2023 மார்ச் 1-ம் தேதி வரை 713 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆதார விலையாக ரூ.1,46,960 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.

நெல் கொள்முதல் செய்யப்படும்போது கூட்டநெரிசல் ஏற்படுவதை தவிர்க்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேநேரத்தில் 2023 மார்ச் 1-ம் தேதி வரை மத்திய தொகுப்பிலிருந்து 246 லட்சம் மெட்ரிக் டன் அரிசி பெறப்பட்டுள்ளது.  நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு ஏதுவான வகையில், மத்திய தொகுப்பில் தற்போது போதுமான அளவு அரிசி கையிருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கே எம் எஸ் 2022-23-க்கான கரீஃப் பருவ நெல் கொள்முதல் மூலம் 766 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.  இதேபோல் எதிர்வரும் ரபி பருவத்தில் 158 லட்சம் மெட்ரிக் டன் நெல்லைக் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.  இதனுடன் சேர்த்து கே எம் எஸ் 2022-23-காலகட்டத்தில் ஒட்டுமொத்தமாக 900 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் எதிர்பார்க்கப்படுகிறது.



Tags : Kharib Season ,Union Govt. , 1 Crore Farmers Benefited From Kharib Season Paddy Procurement: Union Govt
× RELATED முதுநிலை நீட்தேர்வு தள்ளிவைப்பு...