×

'ஸ்ட்ரேஞ்சர் அட் தி கேட்': மலாலா தயாரித்துள்ள ஆவணப்படம் ஆஸ்கருக்கு தேர்வு..!!

லண்டன்: மலாலா தயாரித்துள்ள ஆவணப்படம் ஆஸ்கருக்கு தேர்வாகியுள்ளது. பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதலுக்கு இலக்காகி வெளிநாடுகளின் உதவியோடு உயிர் பிழைத்து தற்போது லண்டலின் வாழ்ந்து வருபவர் மலாலா. இவர் சொந்தமாக திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். குறிப்பிட்ட சமூகத்தினர் மீதான வெறுப்புணர்வுக்கு எதிராக சமீபத்தில் அவர் தயாரித்திருந்த ஸ்ட்ரேஞ்சர் அட் தி கேட் ஆவணப்படம் பெரும் வரவேற்பினை பெற்றது. இந்நிலையில் மலாலாவின் ஸ்ட்ரேஞ்சர் அட் தி கேட் ஆவணப்படம் ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆஸ்கர் விருதுக்கான ஷார்ட் டாகுமென்டரி பிரிவில் மலாலாவின் ஸ்ட்ரேஞ்சர் அட் தி கேட் ஆவணப்படம் போட்டியிடுகிறது.

இஸ்லாமிய சங்கத்தினர் மீதான வெறுப்புணர்வுக்கு எதிரான கதைக்களத்தை மலாலாவின் ஆவணப்படம் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானில் இளம்பெண்கள் மற்றும் சிறுமிகளிடையே பிரபலமாக பேசப்பட்டவர் மலாலா. பெண் சுதந்திரம், பெண் கல்வி குறித்த பிரச்சாரங்களால் பெண்களிடையே பிரபலமாக இருந்த சிறுமி மலாலா, பழமைவாதிகளால் எதிர்க்கப்பட்டார். இதன் விளைவாக 2012ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி தாலிபன் தீவிரவாதியின் துப்பாக்கிச் சூட்டுக்கு அவர் இலக்கானார். பின்னர் பிரிட்டன் கொண்டுசெல்லப்பட்டு பல்வேறு அறுவை சிகிச்சைகளுக்கு பின் குணமடைந்த மலாலா, 8 ஆண்டுகளாக பிரிட்டனிலேயே தங்கியுள்ளார்.


Tags : Malala , 'Stranger at the Gate', Malala, Documentary, Oscar
× RELATED பாலின பாகுபாடு மனித குலத்துக்கு...