வங்கி, ஏடிஎம் மையங்கள் பாதுகாப்பு தொடர்பாக கடலூரில் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.தலைமையில் ஆலோசனை

கடலூர்: வங்கி, ஏடிஎம் மையங்கள் பாதுகாப்பு தொடர்பாக கடலூரில் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.தலைமையில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் வங்கி அலுவலர்கள், ஏடிஎம் அலுவர்கள்  பங்கேற்றுள்ளனர். கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம், எஸ்.பி.ராஜாராம் தலைமையில் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையை அடுத்து கடலூரில் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் தொடர்ச்சியாக பல திரைப்படங்களை பார்த்துவிட்டு இளைஞர்கள் மற்றும் வடமாநில இளைஞர்கள் என அனைவரும் வங்கி மற்றும் ஏடிஎம் மையங்களில் இருக்கும் பணத்தை கொள்ளை அடித்துவிட்டு செல்கிறார்கள். இதனால் அப்பகுதியில் உள்ள வங்கியில் சேமித்து வைத்த பணத்திற்கு பாதுகாப்பு இல்லை என்று மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர், இதனால் வங்கி மற்றும் ஏடிஎம் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகமாக ஏற்படுத்த வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வங்கி கொள்ளைகள் தொடர்ச்சியாக பல மாநிலம், மாவட்டம் மற்றும் அங்காங்கே இருக்கும் ஏடிஎம் மையங்களிலும் நடைபெற்று வருகிறது. இதனால் மக்கள் பலரும் தங்களின் பணத்துக்கு பாதுக்கப்பு இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வங்கி, ஏடிஎம் மையங்கள் பாதுகாப்பு தொடர்பாக கடலூரில் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏ.டி.எம்., மையங்களிலும் பாதுகாப்பு காவலர்களை நியமிக்க வேண்டும். வங்கி மற்றும் ஏ.டி.எம்., இயந்திர அறையின் உட்புறம், வெளிப்புறம் மற்றும் சாலைகளில் சி.சி.டி.வி., பொறுத்தி சரியாக இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். இயந்திரத்தின் கதவு, மேற்கூரை மற்றும் பக்கசுவரை உடைத்தாலோ, மின் இணைப்பை துண்டிக்க முயன்றாலோ அபாய ஒலி அடிப்பதுடன், காவல் கட்டப்பாட்டு அறைக்கு தகவல் செல்லும்படி மென்பொருளை வடிவமைக்க வேண்டும். சென்சார் அலாரத்தை இன்வெர்ட்டர் பேட்டரியுடன் பொறுத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Related Stories: