×

எல்லை பிரச்சனை பற்றிய வெளிப்படை தன்மையான பேச்சுவார்த்தை மட்டுமே பிரச்சனைகளை தீர்க்கும்: ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு

டெல்லி: எல்லை பிரச்சனை பற்றிய வெளிப்படை தன்மையான பேச்சுவார்த்தை மட்டுமே உண்மையான பிரச்சனைகளை தீர்க்க வல்லது என ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் பேசியுள்ளார். இந்தியா இந்த வருடம் தலைமை ஏற்றுள்ள ஜி-20 மாநாட்டின் சர்வதேச வெளியுறவுத்துறை கொள்கைகள் பற்றிய ஆலோசனை கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சீன அதிபர் ஜின் பிங்கின் நெருங்கிய உதவியாளர் கின் உடன் முதல் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் சீன – இந்தியா எல்லை விவகாரம் குறித்து பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில்; எங்களுக்குள்ளான உரையாடல் 45 நிமிடங்கள் நீடித்தது. இரு நாட்டு உறவு பற்றி நாங்கள் பேசினோம். இருவருமே தங்கள் நாட்டு பிரச்சினைகளை கூறி இரு நாடு உறவுகள் புரிந்து கொள்ளக்கூடிய அளவில் இந்த ஆலோசனை நடந்தது. என கூறினார். நாங்கள் இருவருமே எல்லை விவகாரத்தில் வெளிப்படையாக பேச முயற்சி செய்தோம். அந்த வெளிப்படை தன்மையே உண்மையான பிரச்சனைகளை தீர்க்க வல்லது எனவும் ஒன்றிய அமைச்சர் குறிப்பிட்டார்.

எங்கள் சந்திப்பில், ஜி-20 கூட்டமைப்பு குறித்த முன்னேற்றம் பற்றி சிறிது நேரம் பேசியதாக இருந்தாலும், நாங்கள் பெரியதாக பேசியது இருநாட்டு உறவில் உள்ள சவால்கள் மற்றும் எல்லை பகுதியில் உள்ள பிரச்சனைகள் மற்றும் எல்லைகளில் தேவையான அமைதி ஆகியவற்றை பற்றியே எங்களது பேச்சுவார்த்தை இருந்தது என ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். இந்த சந்திப்பு குறித்து சீனா தரப்பிலிருந்து எந்தவிதமும் பதிலும் தற்போது வரை வெளியாகவில்லை.

Tags : Union Minister ,Jaishankar , Only open dialogue on border issue will resolve issues: Union Minister Jaishankar speech
× RELATED 24 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட்...