ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யகோரிய ஓபிஎஸ் தரப்பு வழக்கின் விசாரணை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது

சென்னை: ஜூலை 11 அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யகோரிய ஓபிஎஸ் தரப்பு வழக்கில் உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ்ஸை நியமித்தது உள்ளிட்ட தீர்மானங்களை ரத்து செய்ய கோரி வழக்கு தொடரப்பட்டது.

பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்த நிலையில் தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் சென்னை  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் ஓபிஎஸ் உட்பட 4 பேரை கட்சியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் அதிமுக தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் அதிமுக பொதுக்குழு செல்லும் என கூறப்பட்டிருந்த நிலையில், தீர்மானங்கள் குறித்து எந்த வித கருத்தும் தெரிவிக்கவில்லை என நீதிபதிகள் கூறியிருந்தனர். இந்த நிலையில், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராகவும், அதனை ரத்து செய்ய கோரியும் தற்போது மனோஜ் பாண்டியன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசரனை தற்போது உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது. பொதுக்குழு செல்லும் என்றால் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. ஆனால் ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுக்குழு செல்லும், ஆனால் தீர்மானங்கள் குறித்து எந்தவித கருத்துக்களும் தெரிவிக்கவில்லை என்பதை மையப்படுத்தி வழக்கு தொடர்ந்துள்ளனர்.

Related Stories: