×

அதானி குழுமத்தின் ரூ.15,446 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியது GQG Partners: பங்கு சந்தைகளில் பங்கு மதிப்பு அதிகரிப்பு..!!

குஜராத்: அதானி நிறுவனத்தின் சுமார் 15,446 கோடி மதிப்புள்ள பங்குகளை அமெரிக்காவின் சர்வதேச முதலீட்டு நிறுவனமான GQG Partners வாங்கியிருப்பதை அடுத்து பங்குசந்தைகளில் அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு உயர்ந்து வருகிறது. அதானி குழுமத்தின் பிரமோட்டர் குழுவின் ஒரு பகுதியாக இருக்கும் அதானி அறக்கட்டளை, அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி டிரான்ஸ்மிஷன் ஆகிய நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்துள்ளது.

15,446 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 21 கோடி பங்குகளை அமெரிக்காவின் GQG Partners என்ற சர்வதேச முதலீட்டு நிறுவனம் வாங்கியுள்ளது. இதன் மூலம் புதிய கடன் வாங்க முடியாமல் திணறி வந்த அதானி குழுமத்துக்கு 15,446 கோடி நிதி கிடைத்துள்ளது. இந்த பங்கு விற்பனை மூலம் அதானி குழுமத்தின் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை அதிகரித்துள்ளது. அதானிக்கு சாதகமான இந்த செய்திகளால் அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், அதானி கிரீன் எனர்ஜி மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு இன்றைய வர்த்தகத்தில் 3 முதல் 5 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது.

அதானி பவர், அதானி டோட்டல் கேஸ், அதானி கில்மார்க், ஏ.சி சிலிமேட்டர்ஸ், அம்புஜா சிமெண்ட்ஸ், என்.டி.டி.வி. ஆகிய அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பும் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள GQG Partners நிறுவனத்தின் ஆஸ்திரேலிய பங்குசந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகள் இன்று 3 விழுக்காடு அளவுக்கு சரிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : GQG Partners ,Adani Group , Adani Group, Rs 15,446 crore, share, GQG Partners
× RELATED பங்குச்சந்தை முறைகேடு: அதானி குழுமத்துக்கு செபி நோட்டீஸ்