×

திமுக - விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணியில் எந்த விரிசலும் கிடையாது: திருமாவளவன் பேட்டி

திருச்சி: திமுக - விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணியில் எந்த விரிசலும் கிடையாது என திருமாவளவன் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேற முயற்சிப்பதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து கூறி வருகிறார். விசிக தலைவர் திருமாவளவன், திமுக கூட்டணியை விட்டு வெளியேற முயற்சிக்கிறார்; இதற்காக பாஜக பெயரை பயன்படுத்துகிறார் எனவும்  அண்ணாமலை கூறி வருகிறார். இந்நிலையில், திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், திமுக - விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணியில் எந்த விரிசலும் கிடையாது. இடைத்தேர்தல் வெற்றி மூலம் அரசின் செயல்பாடுகளுக்கு மக்கள் மாபெரும் அங்கீகாரம் அளித்துள்ளனர். வேங்கைவயலில் சிபிசிஐடி விசாரணையும் சரியாக செல்கிறது; தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என்றார். அதிமுக உடனான பேரத்தை அதிகப்படுத்தவே பாமக சார்பில் முதல்வரை சந்தித்துள்ளனர். மம்தா போன்ற தலைவர்களை சந்தித்து காங்கிரஸ் கூட்டணியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பலப்படுத்த வேண்டும் எனவும் திருமாவளவன் தெரிவித்தார்.


Tags : DMK - Liberation Tigers Alliance, Virisal, Thirumavalavan
× RELATED நெல்லை காங்கிரஸ் நிர்வாகி...