வேங்கைவயல் குடிநீர் தொட்டி விவகாரத்தில் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்: சிபிசிஐடி தகவல்

புதுக்கோட்டை: வேங்கைவயல் குடிநீர் தொட்டி விவகாரத்தில் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என சிபிசிஐடி தெரிவித்துள்ளது. குடிநீரில் மனித கழிவு கலந்தது தொடர்பாக இதுவரை 112 பேரை விசாரித்த நிலையில் 45வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது டிச.26ம் தேதி தெரியவந்தது. அன்றில் இருந்து அந்த குடிநீர் தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டு, மாற்று தொட்டியில் இருந்து விநியோகம் செய்யப்பட்டது. மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் குறித்து வெள்ளனூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தமிழ்நாடு அரசின் சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவினர் வேங்கைவயலில் நேரில் ஆய்வு செய்துள்ளது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இது தொடர்பான பல கட்ட விசாரணைகள் நடைபெற்று வருகிறது. வேங்கைவயல் கிராமம், காவிரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் மற்றும் வேங்கைவயல் கிராம ஊராட்சி மன்ற தலைவர் உட்பட பலரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், வேங்கைவயல் குடிநீர் தொட்டி விவகாரத்தில் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

Related Stories: