தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை சென்ட்ரல் - விமானநிலையம் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்.!

சென்னை: சென்னை சென்ட்ரல் - விமானநிலையம் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆலந்தூர் வழித்தடத்தில் பயணிக்குமாறும் மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 2 முதல் இரண்டரை லட்சம் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை சென்ட்ரல் - விமானநிலையம் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டு உள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், இந்த வழியாக பயணிக்கும் பயணிகள் ஆலந்தூர் வழித்தடத்தில் பயணிக்குமாறு மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது எனவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: