×

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி ஓ.பி.எஸ். தரப்பு உயர் நீதிமன்றத்தில் மனு

சென்னை : ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி ஓ.பி.எஸ். தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓ.பி.எஸ். ஆதரவாளர் பி.ஹெச்.மனோஜ் பாண்டியன் உரிமையியல் வழக்கை தாக்கல் செய்துள்ளார். நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பாக இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவை எதிரித்து ஓ.பி.எஸ். மற்றும் வைரமுத்து ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விரிவாக விசாரித்த உச்சநீதிமன்றம், பிப்ரவரி 23ம் தேதி பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பில் ஜூலை 11ம் தேதி கூட்டபட்ட பொதுக்குழு செல்லும் என உத்தரவிட்டிருந்தது.  

இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும், உரிமையியல் நீதிமன்றத்தின் நிவாரணம் பெற வேண்டும் என்ற அடிப்படையிலும், ஓ.பி.எஸ். ஆதரவாளர் பி.ஹெச்.மனோஜ் பாண்டியன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கில் பிராதன கோரிக்கையாக ஜூலை மாதம் 11ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமியை இடைக்காலப் பொதுச் செயலாளராக நியமித்தது, ஓ.பி.எஸ்., வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோர்களை நீக்கியது ஆகிய தீர்மானங்களை ரத்து செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Tags : O.K. ,High Court , OPS demanded cancellation of resolutions passed in AIADMK general meeting. Petition to the High Court by the parties
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...