கச்சத்தீவு திருவிழா :72 படகுகளில் ராமேஸ்வரத்தில் இருந்து மக்கள் பயணம்

 ராமநாதபுரம்  : கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவுக்கான பயணத்தை ராமநாதபுரம் ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.ராமேஸ்வரத்தில் இருந்து 72 படகுகளில் 2400 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். அந்தோணியார் கோவிலில் இன்று மாலை 4 மணிக்கு கொடியேற்றமும், அதனை தொடர்ந்து திருச்செபமாலை, திருச்சிலுவை பாதை தியானம், நற்கருணை ஆராதனை, திருச்சொரூப பவனி உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெறும். மார்ச் 4 காலை 7 மணிக்கு திருச்செபமாலை, திருவிழா திருப்பலி, திருசொரூப ஆசீரும் நடைபெற்று திருவிழா நிறைவுபெறும்.

Related Stories: