×

பிரிந்து நிற்காதீர்கள் என சொல்லியும் கேட்கலை தேர்தல் படுதோல்விக்கு எடப்பாடிதான் காரணம் : அண்ணாமலை மறைமுக குற்றச்சாட்டு

விழுப்புரத்தில் பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று அளித்த பேட்டி: ஈரோடு இடைத்தேர்தலில் மக்கள் அளித்திருக்கக்கூடிய தீர்ப்பை தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறேன். காங்கிரசை சேர்ந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இடைத்தேர்தலில் எப்போதும் ஆளும் கட்சி வெற்றி பெறுவது இயல்பு. ஈரோடு இடைத்தேர்தல் பாஜகவுக்கான தேர்தல் அல்ல. மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். ஆளுங்கட்சி வெற்றி பெறுவது இயல்பு தான். 2024ல் நடைபெறும் மக்களவை தேர்தல்தான் எங்களுக்கான தேர்தல். அதற்காக காத்திருக்கிறோம்.87 சதவீதம் இடைத்தேர்தலில் ஆளும் கட்சியே வென்றுள்ளது. அதிமுகவில் பிரிந்து நிற்கக்கூடாது. சின்னத்தில் நிற்க வேண்டுமா? சுயேட்சையாக நிற்க வேண்டுமா? என்று தேர்தல் தேதி அறிவித்தவுடன் ஒரு குழப்பம் இருந்தது. பலமாக ஆளுங்கட்சியை எதிர்க்க வேண்டும். கட்சி சின்னத்தில் நிற்கவேண்டும் என்பதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தினோம். அப்போது எங்கள் மீது பலர் (எடப்பாடி அணியினர்) கோபம் அடைந்தார்கள்.  

எந்தளவுக்கு பலமாக நிற்க வேண்டும் என்பதை இந்த தேர்தல் உணர்த்தி உள்ளது. 2024க்குள் மீண்டும் ஒரு இடைத்தேர்தல் வேண்டாம் என வேண்டிக் கொள்கிறேன். அனைத்து எம்எல்ஏவும் நன்றாக இருக்க வேண்டும். 2024 தேர்தல் எங்களுக்கான தேர்தல். எங்களோடு கூட்டணி வைப்பவர்களுக்கு எவ்வித நிபந்தனையும் விதிப்பதில்லை. அதிமுக வேட்பாளர் சரியான நபர் தான். 2 முறை வெற்றி பெற்றுள்ளார். தனிபட்ட தலைவருடன்(ஓபிஎஸ் ) நாங்கள் கூட்டணி வைத்ததில்லை. அதிமுக கட்சியுடன் தான் கூட்டணி. பாஜகவின் மகிமை திருமாவளவனுக்கு தெரியவில்லை. இந்தியாவில் கேஸ் இல்லை. பெட்ரோலிய பொருட்கள் வெளிநாட்டில்  இருந்து தான் வருகிறது. தேசிய அளவில் விலை உயர்கிறது. இதனால் கேஸ் விலை உயர்ந்து இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலையை பாஜக அரசு குறைத்த அளவுக்கு வேறு ஆட்சியிலும் குறைக்கப்படவில்லை. இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தாலும், அதிமுகவுடன் பாஜக கூட்டணி தொடரும்.  இவ்வாறு அவர் கூறினார்.


* தேர்தலில்தான் தோல்வி அரசியலில் எங்களுக்கு வெற்றி கே.பி.முனுசாமி பதிலடி

அதிமுக துணை பொதுசெயலாளர் கே.பி.முனுசாமி, கிருஷ்ணகிரி அடுத்த காவேரிப்பட்டணத்தில் நேற்று அளித்த பேட்டி: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளருக்கு தோல்வி என்றாலும், அரசியல் ரீதியாக நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். இரண்டாம் இடத்தை பிடித்துள்ளதால், தமிழகத்தின் வலுவான எதிர்க்கட்சி அதிமுக தான் என மீண்டும் நிரூபித்துள்ளோம். இந்த தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எந்த வேலையும் இல்லை. அண்ணாமலை கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து. இனி அடுத்த தேர்தலில், அதிமுக தலைமையில்தான், கூட்டணி கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்றார்.




Tags : Edappadi ,Katkala ,Annamalai , Edappadi is the reason for Ketkala election mishap: Annamalai indirect accusation
× RELATED எடப்பாடி பழனிசாமி ரோடு ஷோ சென்றால்...