எடப்பாடியை முன்னிறுத்திய தேர்தலில் தோல்வி அதிமுகவுக்கு பொதுமக்கள் யாரும் வாக்களிக்கவில்லை: பண்ருட்டி ராமசந்திரன் குற்றசாட்டு

சென்னை: எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் தோல்வியையே சந்தித்தோம். இடைதேர்தலில் அதிமுகவுக்கு பொதுமக்கள் யாரும் வாக்களிக்கவில்லை என ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமசந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னைபசுமைவழிச்சாலையில் ஓபிஎஸ் இல்லத்தில் அவருடைய ஆதரவாளர் பண்ருட்டி ராமசந்திரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது.ஓபிஎஸ் என்னிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து தனது உணர்வுகளை தெரிவித்தார். இந்த இடைத்தேர்தல் முடிவு பேரதிர்ச்சியையும், மனவேதனையும் அளித்து இருக்கிறது. ஈரோடு பகுதி எங்களின் கோட்டை என தம்பட்டம் அடித்துக்கொண்டவர்கள் அவர்களே, இந்த தேர்தலை முன்னிருந்து நடத்த ஒத்துழைப்பு அளித்தோம். எம்ஜிஆர் ரத்தத்தை வேர்வையாக மாற்றி இந்த கட்சியை அவர் வளர்த்தார். ஜெயலலிதா இந்த இயக்கத்தை அவரால் இயன்ற அளவு பாடுபட்டு பெரிய இயக்கமாக வளர்த்தார். எப்படி இருந்த நாம் இப்படி ஆகிவிட்டோமே என எண்ணுகிறது எங்களுக்கும், தொண்டர்களும் மன வேதனை ஏற்படுகிறது. யாரால் இந்த நிலைமை ஏற்பட்டது என்று எண்ணி பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளார் என்ற நிலையை மாற்றி பொதுச்செயலாளர் பதவி உருவாக்க வேண்டும் என முனைந்தார்கள். உறுப்பினர்களால் தான் தலைமை பொறுப்பாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என எம்ஜிஆர் விதித்த அடிப்படை விதியை மாற்ற முயன்றார்கள். ஓபிஎஸ் மற்றும் கழக உறுப்பினர்களை உதாசினப்படுத்தினார்கள். இடைதேர்தல் வந்த போது அதிமுக என்ற கட்சி வீணாக கூடாது என்பதற்காக உச்சநீதிமன்றம் இரட்டை இலை சின்னத்தை கொண்டு போட்டியிட தீர்ப்பு அளித்தார்கள். அதை நாங்கள் முழு மனதோடு ஏற்றுக்கொண்டோம். அந்த தீர்ப்பின் படியும் எடப்பாடி தரப்பு நடந்துக்கொள்ளவில்லை. அவர்களே ஒரு வேட்பாளரை வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுத்தார்கள் அதையும் நாங்கள் எதிர்க்கவில்லை. தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் கிடைத்தால் போதும் என இருந்தோம். எங்கள் தரப்பு வேட்பாளரை வாபஸ் பெற்று நாங்களும் உழைக்கிறோம் என கூறியும் ஓபிஎஸையும் எங்கள் யாரையும் அழைக்கவில்லை. ஈரோடு கிழக்கு தொகுதியில் இருந்த ஓபிஎஸ் ஆதரவாளர்களை கூட தேர்தல் பணியில் ஈடுப்படுத்தவில்லை. இருப்பினும் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகபொறுமை.ஆனால் டெபாசிட் ஆவது பெற்றோம் என்பதை ஒரு ஆறுதலாக கருதுகிறோம். இதற்கெல்லாம் காரணம் எடப்பாடி என்கிற ஒரு தனிப்பட்ட நபரும், அவரை சேர்ந்தவர்களின் ஆணவப்போக்கு, யாரை அரவனைத்து செல்லாத தன்மை. எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்று அவரை முன்னிறுத்தி போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் தோல்வியையே சந்தித்தோம்.

பொதுமக்களை ஈர்க்கக்கூடிய தலைமை, திட்டம், கொள்கை முன்வைக்கவில்லை அதுவே தோல்விக்கு காரணம். எடப்பாடியே எடுபடவில்லை எடப்பாடியின் பிரசாரம் எப்படி எடுபடும். எம்ஜிஆருக்கு இறுதி வரை வெற்றிமுகம் ஆனால் எடப்பாடி தொடக்கம் முதலே தோல்வி முகம். ஓட்டுநர் சரியில்லை என்றால் அவரை மாற்ற வேண்டும் இல்லையென்றால் பயணத்தை தொடரமுடியாது. அதிமுக பெற்ற வாக்குகளை விட காங்.-அதிமுக இடையே வாக்கு வித்தியாசம் அதிகம் இதைவிட வேதனை வேறு என்ன இருக்க முடியும். அவர்கள் ஜாதியை நோக்கி செல்கிறார் நாங்கள் நீதியை நோக்கி செல்கிறோம். , ஒரு லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். எடப்பாடியை பிடிக்கவில்லை அதை ஒப்புக்கொள்ள முடியாமல் பணநாயகம் என கூறுகிறார்.

Related Stories: