தமிழ்நாட்டின் தொலைநோக்குத் திட்டத்திற்கு ஆதரவளிக்க தொழில் நுட்ப ஹப் திட்டத்திற்கு காவேரி மருத்துவமனை ரூ.75 லட்சம் நிதி பங்களிப்பு: அமைச்சர் மனோ தங்கராஜிடம் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் வழங்கினார்

சென்னை: தமிழ்நாட்டின் தொலைநோக்குத் திட்டத்திற்கு ஆதரவளிக்க தொழில் நுட்ப ஹப் திட்டத்திற்கு காவேரி மருத்துவனை ரூ.75 லட்சத்தை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜிடம் காவேரி மருத்துவமனையின் செயலாக்க இயக்குனரும், இதன் இணை நிறுவனருமான டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் வழங்கினார். தமிழ்நாடு அரசின் iTNT என்ற இந்த அமைப்பு, புத்தாக்கத்தை ஊக்குவிக்கவும், உலகின் மீது நேர்மறை தாக்கத்தை உருவாக்க வேண்டுமென்ற குறிக்கோளோடும், அரசின் ஆதரவோடு தொழில்முனைவோர்கள், புதிய சிந்தனையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்துறையோடு இணைந்து பல்வேறு சூழல் அமைப்புகளில் செயல்படுகிறது.  ஐந்து ஆண்டுகள் கால அளவில் காவேரி மருத்துவமனை குழுமம் ரூ.75 லட்சம் என்ற தொகையை இத்திட்டத்திற்கு வழங்கும்.  இம்மருத்துவமனையின் நிதி பங்களிப்பிற்கான முதல் கட்டத் தொகையை தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைகள் துறையின் அமைச்சர் மனோ தங்கராஜிடம் காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிறுவனர் டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் வழங்கினார்.  

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கனவாக ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக தமிழ்நாட்டை உயர்த்தும் திட்டம் இருக்கிறது. இந்த மாபெரும் கனவை நிஜமாக்குவதற்காகவும் மற்றும் தமிழ்நாட்டில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் வழியாக, வளர்ந்து வரும் மற்றும் ஆழ்நிலை தொழில்நுட்ப புத்தாக்கங்களை சாத்தியமாக்குவதற்கும் இந்த முன்னெடுப்பின் வழியாக காவேரி மருத்துவமனை பங்களிப்பை வழங்கும். தற்போது தமிழ்நாடு மாநிலத்தில் 300க்கும் அதிகமான ஆழ்நிலை தொழில்நுட்ப ஸ்டார்ட்- அப் நிறுவனங்கள்  இயங்கி வருகின்றன. இந்திய நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் தொழில் நிறுவனங்களை கொண்ட மாநிலம் என புகழ்பெற்றிருக்கும் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் தமிழ்நாடு டெக்னாலஜி ஹப் அமைந்திருக்கிறது. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்கள் மற்றும் ஆழ்நிலை தொழில் நுட்பங்கள் ஆகிய பிரிவுகளில் பணியாற்றி வரும் ஸ்டார்ட் - அப் நிறுவனங்களின் சூழலமைப்பை 570-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளின் கல்விசார் வலையமைப்போடும் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்துறை பங்காளர்களுடனும் இது இணைக்கிறது.

எதிர்காலத்தின் உலகளாவிய பொருளாதாரத்தை வடிவமைப்பதற்கும் புத்தாக்கத்தை ஊக்குவித்து வளர்ப்பதே இதன் நோக்கமாகும். சென்னை காவேரி மருத்துவமனையின் செயலாக்க இயக்குனரும், இதன் இணை நிறுவனருமான டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது: “iTNT ல் எமது நிதியளிப்பு செயல்பாடானது, தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பது மீது நாங்கள் கொண்டிருக்கும் எமது பொறுப்புறுதியை பிரதிபலிக்கிறது. இம்மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் ஸ்டார்ட் - அப் நிறுவனங்களும், புத்தாக்கங்களும் உருவாகி வரும் நிலையில் அவைகளுக்கான ஒரு அடைகாப்பு மையமாகவும் மற்றும் ஸ்டார்ட் -அப்களை கைப்பிடித்து வழிநடத்தும் வழிகாட்டியாகவும் iTNT  திட்டம் செயல்படுகிறது.  தமிழ்நாடு மாநில அரசின் இந்த மாபெரும் தொலைநோக்கு திட்டத்தின் ஒரு அங்கமாக பங்கேற்பதில்  மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்கிறோம்.

Related Stories: