ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம்: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பங்கேற்பு

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் செயல்படுத்தப்படும்  நலத்திட்டங்கள், நிதி ஒதுக்கீடு மற்றும் அவற்றின் செயலாக்கம்  குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி  செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்கள், நிதி ஒதுக்கீடு மற்றும் அவற்றின் செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பாக இவ்வின மக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து அனைத்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்கள் மற்றும் பழங்குடியினர் நல திட்ட அலுவலர்களுடன்  ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டங்களுக்கான நிதி முழுமையாக செலவழிக்கபட்டு அதன் பயன் மக்களை விரைந்து சென்றிடுவதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

Related Stories: