×

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வருடன் பரூக் அப்துல்லா சந்திப்பு

சென்னை:சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பரூக் அப்துல்லா பேசினார்.திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா நேற்று சந்தித்து பேசினார்.அப்போது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், கூட்டணி கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையொட்டி வாழ்த்து தெரிவித்தார். அப்போது, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு , எம்பிக்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் காங்கிரஸ் எம்பி ஜே.எம்.ஆரூண் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

சந்திப்புக்கு பின்னர் பரூக் அப்துல்லா அளித்த பேட்டி:முதல்வர் மு.க.ஸ்டாலின், எல்லா துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவருக்கு வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன். அதோடு, மீண்டும் அவருக்கு 70வது பிறந்த நாள் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.திமுகவின் எல்லா வெற்றிக்கும் வாழ்த்து தெரிவிப்பதோடு, தமிழ்நாட்டு மக்களின் எதிர்காலம் சிறப்பானதாகவும் இருக்கும். மேலும், நாம் எல்லாம் ஒன்றாக சேர்ந்து வலிமையான இந்தியாவை உருவாக்குவோம் என நம்புகிறேன். அந்த இந்தியா அமைதி மற்றும் மத நல்லிணக்கனம் உள்ள இந்தியாவாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Farooq Abdullah ,Chief Minister ,Anna ,University ,Chennai , Farooq Abdullah meeting with the Chief Minister at Anna University, Chennai
× RELATED தோல்வியை தழுவிய பரூக் அப்துல்லா, மெகபூபா