பட்டாபிராம் காவல் நிலையத்தில் காவலர்களுக்கு சிறப்பு கண் சிகிச்சை முகாம்: உதவி ஆணையர் தொடங்கி வைத்தார்

ஆவடி: பட்டாபிராம் போக்குவரத்து காவலர்களுக்கு கண் சிகிச்சைக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. ஆவடி காவல் ஆணையகத்திற்கு உட்பட்ட பட்டாபிராம் போக்குவரத்து காவல் நிலைய வளாகத்தில், காவலர்களுக்கான சிறப்பு கண் சிகிச்சை முகாம் நடந்தது. போக்குவரத்து ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில், உதவி ஆணையர் ராமச்சந்திரன் முகாமை துவக்கி வைத்தார். அரவிந்த் கண் மருத்துவமனை சிறப்பு மருத்துவர்கள் கலந்துகொண்டு, காவலர்களுக்கு கண் பரிசோதனை செய்தனர்.  

இதில் கிட்ட பார்வை,  தூர பார்வை,  கண்புரை, அறுவை சிகிச்சை, கோடை காலங்களில் கண்களில் அதிகம் வெப்பம் பட்டால் கண்களில் நீர் வடிதல், வெப்பம் அதிகமானால் கண் எரிச்சல் போன்ற கண் நோய்களுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனைகள் அதிநவீன கருவிகளை கொண்டு நடைபெற்றது. பட்டாபிராம் காவலர் குடியிருப்பில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட போக்குவரத்து காவலர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில்,  பட்டாபிராம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் பிரித்விராஜ் மற்றும் போக்குவரத்து காவலர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளும் தங்களது குடும்பம் குழந்தைகளுடன் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Related Stories: