×

திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் தளபதி கோப்பை பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டி: அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்

சென்னை: திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு ‘தளபதி கோப்பை’ பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டி மார்ச் 2 மற்றும் மார்ச் 3, 4 ஆகிய தேதிகளில் சென்னை சேப்பாக்கம் மெரினா விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் என்று திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறன் எம்பி அறிவித்திருந்தார். அதன்படி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மெரினா விளையாட்டு மைதானத்தில், தளபதி கோப்பை பெண்கள் டி-20 கிரிக்கெட் போட்டி துவக்க விழா நேற்று காலை நடந்தது.விழாவிற்கு திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறன் எம்பி தலைமை தாங்கினார். போட்டியை திமுக இளைஞர் அணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் இலட்சினையையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.

இதனை தயாநிதி மாறன் எம்பி பெற்று கொண்டார். அப்போது, அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் உடன் இருந்தார்கள்.விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:விளையாட்டு மேம்பாட்டு அணியின் முதல் நிகழ்ச்சியே கலைஞருக்கு பிடித்த கிரிக்கெட் போட்டியாக நடத்தப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. ரூ.25 கோடி மதிப்பில் முதலமைச்சர் கோப்பை போட்டி நடைபெற உள்ளது. என்றார். விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் மாவட்ட திமுக செயலாளர் சிற்றரசு, பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆளுங்கட்சி துணை தலைவரும், திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் ஏஆர்பிஎம்.காமராஜ், சேப்பாக்கம் பகுதி செயலாளரும், மாநகராட்சி மண்டல குழுத்தலைவருமான எஸ்.மதன்மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போட்டியின் ஒருங்கிணைப்பு பணிகளை மாநில துணைச் செயலாளர்களான பொன்.கௌதம் சிகாமணி எம்.பி., எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி, ஜே.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, ஆகியோர் மேற்கொண்டிருந்தனர்.



Tags : Thalapathy Cup Women T20 Cricket Tournament ,DMK Sports Development Team ,Minister ,Udayanidhi , Thalapathy Cup Women T20 Cricket Tournament on behalf of DMK Sports Development Team: Minister Udayanidhi inaugurated
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...