×

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா: செரப்பணஞ்சேரியில் 300 பேருக்கு பிரியாணி

ஸ்ரீபெரும்புதூர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, செரப்பணஞ்சேரி ஊராட்சியில் 300 ஏழை, எளிய மக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. குன்றத்தூர் ஒன்றியம் செரப்பணஞ்சேரி ஊராட்சி திமுக சார்பில், நேற்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடபட்டது. விழாவில், முன்னாள் தலைவர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டு கட்சி கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

பின்னர், மதியம் 300 பேருக்கு பிரியாணி வழங்கபட்டது. விழாவில் கட்சி நிர்வாகிகள் ராஜசேகர், விஜயகுமார், முருகன், சோனு, மணி, சுரேஷ், நாகராஜ், ஜெயராஜ், ராதா, பிரியா, செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Biryani ,Cherappancherry , Chief Minister M. K. Stalin's birthday party: Biryani for 300 in Cherappancherry
× RELATED தமிழர்கள் உயர்ந்த நிலைகளில்...