×

வீட்டு சமையல் எரிவாயு விலை உயர்வு தலைவர்கள் கடும் கண்டனம்

சென்னை: வீட்டு சமையல் எரிவாயு விலை உயர்வு நடுத்தர, ஏழை மக்கள் மீது  தொடுக்கப்படும் தாக்குதல் என்று ஒன்றிய அரசுக்கு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ராமதாஸ்(பாமக நிறுவனர்): வீட்டுப்  பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களால்  சமாளிக்க முடியாத விலை. எனவே, சமையல் எரிவாயு விலை  உயர்வை ரத்து செய்ய வேண்டும்.
முத்தரசன்(சிபிஐ மாநில செயலாளர்): ஒன்றிய அரசின் மிக மோசமான சிலிண்டர் விலை உயர்வை வன்மையாகக் கண்டிப்பதுடன் திரும்பப் பெற வேண்டும்.
ஜி.கே.வாசன்(தமாகா தலைவர்): மத்திய அரசு வீட்டு உபயோகத்திற்கான காஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியதால் ஏழை, எளிய நடுத்தர மக்களின் பொருளாதார சுமை கூடும். எனவே மத்திய அரசு உயர்த்தப்பட்டு இருக்கும்காஸ் சிலிண்டரின் விலையை திரும்ப பெற உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதே போல பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Tags : Heads , Leaders strongly condemned the rise in domestic cooking gas prices
× RELATED ஜூன் 9ம் தேதி 3வது முறையாக பிரதமராக...