வடபழனியில் மெட்ரோ ரயில் பணி தூண் அமைக்கும் கம்பிகள் சரிந்தது: போக்குவரத்து பாதிப்பு

சென்னை: வடபழனியில் மெட்ரோ தூண்கள் அமைக்கும் போது கம்பிகள் சரிந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சென்னையில் மெட்ரோ ரயில் 2ம்கட்ட பணி நடந்து வருகிறது. பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரையிலான வழித்தடத்தில் செல்லக்கூடிய மெட்ரோ பாதைக்கான தூண்கள் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் வடபழனி விஜயா மருத்துவமனை அருகே தூண்கள் அமைப்பதற்காக கட்டப்பட்ட கம்பிகள் நேற்று திடீரென சரிந்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதை இயந்திரம் மூலம் சரிசெய்யும் பணியில் மெட்ரோ பணியாளர்கள் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஏற்கனவே ஒரு வழிப்பாதையாக மாற்றுப்பட்டுள்ள நிலையில் அந்த பகுதியில் அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

Related Stories: