×

முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு 70 மரக்கன்றுகள் நடும் விழா: 700 பேருக்கு பிரியாணி

திருவள்ளூர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாள் விழா, பூந்தமல்லி நகரம், 13வது வார்டில் நகராட்சி கவுன்சிலரும், நகர பொருளாளருமான பூவை எஸ்.அசோக்குமார் ஏற்பாட்டில் நடந்தது. இதில், நகர செயலாளர் ஜி.ஆர்.திருமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 700 பேருக்கு பிரியாணி மற்றும் இனிப்பு வழங்கி, 70 மரக்கன்றுகளை நட்டார். விழாவில், நகர மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், துணைத் தலைவர் ஸ்ரீதர், வட்ட செயலாளர் நந்தகுமார், பொன்.பாண்டுரங்கன், எம்.வேல்முருகன், ஜெயபாலன்,   கன்னியப்பன், எஸ்.அபூபக்கர்,
உலகநாதன், ரகமதுல்லா, எம்.அப்துல் ஹமீது, எம்.ஜி.ராமு, ஜோசப், எஸ்.குணசேகரன், உ.பிரகாஷ், ஏ.எம்.எஸ்.சபீக் அகமது, ஏ.எம்.எம்.உசேன், பழனி மேஸ்திரி,  என்.சக்தி, கந்தசாமி,  பச்சையப்பன், எம்.உசேன், மகாலிங்கம், சத்தியசீலன், டி.மோகன், எஸ்.கார்த்தி, எச்.திலிப், எம்.அசார், டி.வெங்கடேசன், ஒய்.நிஜாம், ஜெ.ராஜேஷ், டி.ஜெகதீஷ், பி.வாசு, எஸ்.தெய்வசிகாமணி, அர்.மணிமாறன், முகமது எக்யா, காதர், பிரசாந்த் மற்றும் நகர நிர்வாகிகள் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.


Tags : Sapling Plantation Ceremony ,Chief Minister , 70 Sapling Plantation Ceremony on Chief Minister's Birthday: Biryani for 700 People
× RELATED மணிப்பூர்; முன்னாள் முதலமைச்சர்...