சென்னை: அதிமுகவின் தற்போதையை நிலைமை மிகுந்த மனவேதனை அளிக்கிறது என பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் டெபாசிட் கிடைத்துள்ளது என்பது ஒரு ஆறுதலான விஷயம் என்று கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு தேர்தலில் கட்சித் தொண்டர்களும் ஆதரவாளர்களும்தான் அதிமுகவுக்கு வாக்களித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமியால் தொடர் தோல்விகளை அதிமுக சந்தித்து வருகிறது எனவும் கூறிள்ளார்.