×

'MSME Connect 2023'தொழில் கண்காட்சி மற்றும் விற்பனையாளர் மேம்பாட்டு நிகழ்ச்சி, சென்னையில் நாளை தொடங்குகிறது

சென்னை: MSME Connect 2023 தொழில் கண்காட்சி மற்றும் விற்பனையாளர் மேம்பாட்டு நிகழ்ச்சி, சென்னை, கிண்டி, சிட்கோ தலைமை இடத்தில் மார்ச் மாதம் 03 மற்றும் 04 ஆகிய இரு தினங்களில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் ‘FaMe TN’ நிறுவனம் மற்றும் ஒன்றிய அரசின் MSME துறையும் இணைந்து விற்பனையாளர் மேம்பாட்டிற்காக MSME Connect 2023  தொழில் கண்காட்சி மற்றும் விற்பனையாளர் மேம்பாட்டு நிகழ்ச்சி, சென்னை, கிண்டி, சிட்கோ தலைமை இடத்தில் மார்ச் மாதம் 03 மற்றும் 04 ஆகிய இரு தினங்களில் நடைபெற உள்ளது.

மார்ச் 4ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு நிறைவு விழாவில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு தா.மோ.அன்பரசன் அவர்கள் கலந்து கொள்ள உள்ளார். இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட MSME நிறுவனங்கள், சுமார் 30 பெரிய அரசு நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள்  பங்கேற்க உள்ளனர். பெரிய அளவிலான அலகுகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களான AVNL(HVF, EFA), OCFAV, BHEL, ரயில்வே துறை, ஆண்ட்ரூ யூல், சென்னை போர்ட் டிரஸ்ட், VOTPA, ICF, AAI, CMRL, MFL, CPCL, IOCL, BEL, DCIL, NLC, Balmer, Lawrie மற்றும் Co. Ltd, TIIC, FaMe TN, TANSIDCO, KVIC, NSIC மற்றும் TNPCB, CPCB, BIS, EPFO, FASSI போன்ற ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
MSME இணைப்பு 2023 தொழில் கண்காட்சி மற்றும் விற்பனையாளர் மேம்பாட்டு நிகழ்ச்சியில், MSME நிறுவனங்களுக்கான “பொது கொள்முதல்” கொள்கையை திறம்பட செயல்படுத்தும் வகையில் சந்தை வாய்ப்புகளை எளிதாக்க இந்த விற்பனையாளர் மேம்பாட்டு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இதன் மூலம்:
● SC/ST மற்றும் பெண் தொழில்முனைவோரால் நடத்தப்படும். MSME நிறுவனங்களுக்கு “பொது கொள்முதல் கொள்கை” பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்,
● மாநில மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் கொள்முதல் அதிகாரிகள், அரசு  கொள்முதல் முகமைகள், கார்ப்பரேட்டுகள் மற்றும் MSME விற்பனையாளர்களுக்கு இடையேயான “B2B” சந்திப்புகளை எளிதாக்குதல்.
● பெரு நிறுவனங்களுடன், நீண்ட கால வணிக உறவுகளை உருவாக்க MSME நிறுவனங்களுக்கு உதவுதல்.
● பெரிய அளவில் கொள்முதல் செய்யும் நிறுவனங்களின் கொள்முதல் நடைமுறைகளை பரப்புவதற்கும், GEM நிகழ்நிலை விற்பனைத்தளம் பற்றியும், மேலும் மத்திய, மாநில அரசின் பல்வேறு திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
● கொள்முதல் முகமைகளின் தேவைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் தொழில் முனைவோரை ஊக்குவித்தல்,
● “ஆத்ம நிர்பார் பாரத்” திட்டத்தின் ஒரு பகுதியாக உள்நாட்டு பங்களிப்பை ஊக்குவித்தல் ஆகியன மேற்கொள்ளப்படும்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையானது இந்திய பொருளாதாரத்தில் கடந்த 50 வருடங்களில் ஒரு ஆற்றல் வாய்ந்த மற்றும் துடிப்பான துறையாக வளர்ந்துள்ளது. MSME நிறுவனங்கள் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பது மட்டுமல்லாமல், பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை குறைத்து தேசிய வருமானம் மற்றும் நாட்டின் வளத்தினை சமமான வகையில் பகிர்ந்தளித்து, கிராமப்புற மற்றும் பின் தங்கிய பகுதிகளை முன்னேற்றுவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. MSME நிறுவங்களுக்கான ‘பொது கொள்முதல்’ கொள்கைகளை சிறப்பாக செயல்படுத்தும் வகையில் கொள்முதல் மற்றும் சந்தைப் படுத்துதல் உதவிகளை அளிக்கும் வகையில் இந்த நிகழ்வு அமையும்.

மத்திய மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களுக்கு MSME நிறுவனங்கள் விற்பனை செய்வதை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசின் MSME அமைச்சகம் பல முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தங்களது ஆண்டு கொள்முதலில் குறைந்தபட்சம் 25% சதவீதத்தினை MSME நிறுவனங்களிலிருந்து வாங்குவது உறுதி செய்யப்படுகிறது. மேற்குறிப்பிட்ட 25% சதவீத ஆண்டு இலக்கினில், 4% சதவீதம் SC/ST தொழில் முனைவோர்களால் நடத்தப்படும் குறு மற்றும் சிறு நிறுவனங்களிலிருந்து கொள்முதல் செய்வதையும், 3% சதவீதம் ஆண்டு கொள்முதல், மகளிர் தொழில் முனைவோரால் நடத்தப்படும் குறு மற்றும் சிறு நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்வதையும் உறுதி செய்கிறது .

பொது கொள்முதல் கொள்கையின் நோக்கம், MSME நிறுவனங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை பெரு நிறுவனங்கள் பெற்றுக்கொள்வதையும், அதன் மூலம் அவர்களின் தொழிலை மேம்படுத்துவதுமேயாகும். மேலும், இக்கொள்கையானது, நியாயமான, சமமான, வெளிப்படையான மற்றும் சிக்கனமான சிறந்த கொள்முதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதை மையப்படுத்தியே அமைந்துள்ளது.    
இந்த இரண்டு நாள் நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை செயலர் வி.அருண் ராய் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். தொழில் வணிக ஆணையர் சிஜிதாமஸ் வைத்யன், சிட்கோ மேலாண்மை இயக்குநர் மதுமதி, தொழில் வணிக கூடுதல் ஆணையர் கிரேஸ் பச்சாவ்,  CPCL இயக்குனர், AVNL மேலாண்மை இயக்குநர், TANSTIA தலைவர் மாரியப்பன், FASII தலைவர் மற்றும் பல்வேறு பொதுத் துறை  நிறுவனங்களின் உயர் அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்.


Tags : MSME Connect 2023 ,Chennai , 'MSME Connect 2023', the industry fair and vendor development event, begins tomorrow in Chennai
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!