×

சேத்தியாத்தோப்பு அருகே புதிய பாலத்தில் சேதமடைந்து காணப்படும் சோலார் விளக்குகள்: சீரமைக்க வலியுறுத்தல்

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே உள்ள புதிய பாலத்தில் சோலார் மின்விளக்குகள் சேதமானதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். சேத்தியாத்தோப்பு அருகே உள்ள புதிய பாலத்தில் பூதங்குடி ஊராட்சியின் சார்பில் சோலார் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு 10க்கும் மேற்பட்ட கம்பங்கள் அமைக்கப்பட்டு சில ஆண்டுகளுக்கு முன் இரவு நேரங்களில் இருளின்றி வெளிச்சமாக இருந்து வந்ததால் வாகன ஓட்டிகள் மற்றும் அள்ளூர் கிராம மக்கள் அச்சமின்றி பாதுகாப்புடன் பாலத்தின் வழியே சென்று வந்தனர்.

அள்ளூர் கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், வெளியூர்களுக்கு பேருந்தில் சென்று வரவும் சேத்தியாத்தோப்பு நகருக்குதான் வந்து செல்லவேண்டும்.மேலும் மாணவ, மாணவிகள் புதிய பாலத்தை கடந்துதான் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வரவேண்டும்.  எந்த நேரங்களிலும் நடமாட்டம் உள்ள இந்த புதிய பாலத்தில் சோலார் மின்விளக்குகள் சில ஆண்டுகளாக எரியாமல் உள்ளதால் திருட்டு மற்றும் கொள்ளை, வழிப்பறி நடக்க வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

மின்கம்பங்களில் ஒரு சில கம்பங்களை சமூக விரோதிகள் திருடி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. எனவே சென்னை-கும்பகோணம் சாலையை இணைக்கும் விதமாக உள்ள புதிய பாலத்தை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து புதிய மின்கம்பங்களையும், சோலார் விளக்குகளையும் அமைத்து பொதுமக்கள் அச்சமின்றி சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அள்ளூர் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Setiyathopp , Damaged solar lights on new bridge near Chetiathoppu: Urge to repair
× RELATED சேத்தியாத்தோப்பு பேருந்து நிறுத்த...