×

இடைத்தேர்தலில் அமோக வெற்றி: 39 ஆண்டுகளுக்கு பிறகு சட்டமன்ற உறுப்பினர் ஆகிறார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்..!

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்கியது முதல் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிமுக வேட்பாளரை விட 2 மடங்கு அதிக வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார். இதனால் திமுக, காங்கிராஸ் கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

அதேநேரத்தில் அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளதால், எடப்பாடி கடும் அப்செட் அடைந்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் அணி மீண்டும் குஷியடைந்து தங்கள் அணியை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 15 சுற்றுக்காலாக நடைபெற்று வந்த வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் தொடர்ந்து முன்னிலையில் இருந்தார். இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார். 66,575-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார். பதிவான 1,74,192 வாக்குகளில் 1,10,556 வாக்குகளை பெற்று ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார்.

வெற்றி வித்தியாசத்தைவிட அதிமுக வேட்பாளர் பெற்ற ஒட்டுமொத்த வாக்குகள் குறைவாக உள்ளது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ள நிலையில் அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். கடந்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட யுவராஜ் 58,396 வாக்குகள் பெற்றிருந்தார். த.மா.கா. வேட்பாளர் யுவராஜைவிட தற்போது 15,000 வாக்குகள் குறைவாக பெற்றிருக்கிறார் அதிமுக வேட்பாளர் தென்னரசு. நாம் தமிழர் கட்சி 10,804 வாக்குகளும், தேமுதிக ,1, 177 வாக்குகளும், பெற்றனர்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்கள் தவிர எஞ்சிய வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர். நாம் தமிழர் மற்றும் தேமுதிக வேட்பாளர்கள் மொத்தம் பதிவான வாக்குகளில் 6-ல் ஒரு பங்கை பெறாததால் டெபாசிட் இழந்தனர். அதிமுகவுக்கு செல்வாக்கு உள்ள மேற்கு மண்டலத்திலேயே பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. இரட்டை இலை சின்னம் கிடைத்தும் மொத்தம் பதிவான வாக்குகளில் பாதியை கூட பழனிசாமி தரப்பால் பெற முடியவில்லை.

இடைத்தேர்தல் வெற்றியின் மூலம் 39 ஆண்டுகளுக்கு பிறகு சட்டமன்ற உறுப்பினர் ஆகிறார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். 75 வயதான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 1984-ம் ஆண்டு சத்தியமங்கலம் சட்டமன்ற தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார். 2004 முதல் 2009 வரை கோபிச்செட்டிப்பாளையம் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்று ஒன்றிய அமைச்சராக பதவி வகித்தார்.


Tags : Amoka ,K.K. S.S. blankovan , Overwhelming victory in by-elections: EVKS becomes MLA after 39 years Young man..!
× RELATED பாசிச பாஜக ஆட்சிக்கு முடிவு கட்ட...