×

தேர்தல் ஆணையர்கள் தேர்வு குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்.!

சென்னை: தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்ய பிரதமர், தலைமை நீதிபதி, எதிர்க்கட்சி தலைவர் கொண்ட குழு முடிவு செய்ய வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தை தீர்ப்பை வரவேற்கிறேன் என முதல்வர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் கொண்ட குழுவின் பரிந்துரையின் பேரில் நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று காலை அதிரடியான தீர்ப்பை வழங்கியிருந்தது. தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் முறையில் சீர்திருத்தம் கோரிய வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த தீர்ப்பை அளித்திருந்த்தது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வரவேற்பு அளித்து வருகின்றனர். அந்தவகையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்வதில் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் வரவேற்பு அளித்துள்ளார். அவரது பதிவில், தேர்தல் ஆணையர் நியமனத்தில் சரியான நேரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டுள்ளது. ‘தன்னாட்சி அமைப்புகள்’ கொள்ளையடிக்கப்படும் போது, உச்சநீதிமன்றம் இந்த சரியான நேரத்தில் தலையீடு என்பது இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தைப் பாதுகாக்க முக்கியமானது, அதன் வெளிப்படையான செயல்பாடு ஒரு துடிப்பான ஜனநாயகத்திற்கு இன்றியமையாதது என தெரிவித்துள்ளார்.

Tags : Supreme Court ,Chief Minister ,Mueller G.K. Stalin , I welcome the Supreme Court's verdict on Election Commissioners: Chief Minister M.K.Stalin's tweet!
× RELATED கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்;...