நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் மூலக்கொத்தளத்தில் ரூ.122.20 கோடியில் 1044 அடுக்குமாடி குடியிருப்பு: அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று ஆய்வு

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ராயபுரம் சட்டமன்ற  தொகுதி மூலக்கொத்தளம் திட்டப்பகுதியில் ரூ.122.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1044 அடுக்குமாடி குடியிருப்பினை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து தா.மோ.அன்பரசன் அளித்த பேட்டி: தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ராயபுரம் சட்டமன்ற தொகுதி மூலக்கொத்தளம் திட்டப்பகுதியில் பகுதி-1 ரூ.77.01 கோடி மதிப்பீட்டில் தூண் தளத்துடன் 9  மாடிகளுடன் 648 குடியிருப்புகளும், பகுதி-2 ரூ.45.19 கோடி மதிப்பீட்டில் தூண் தளத்துடன் 11  மாடிகளுடன் 396 குடியிருப்புகளும் மொத்தம் ரூ.122.20 கோடி மதிப்பீட்டில் 1044 அடுக்குமாடி குடியிருப்புகள் 5.29 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

இங்கு கட்டப்பட்டுள்ள ஒவ்வொரு குடியிருப்புகளும் 409 ச.அடி பரப்பளவு கொண்டதாகும். இவ்வடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமானப் பணி 9.7.2018அன்று  தொடங்கப்பட்டு டிசம்பர் 2020 அன்று நிறைவடைந்தது. சுற்றுச்சூழல், சிஎம்டிஏ, சென்னை மாநகராட்சி, ரீரா ஆகி அனுமதிகள் பெறாததால் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, கழிவு நீர் இணைப்புகள் 2 ஆண்டுகளாக வழங்கப்ப்படவில்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுச்சூழல், சிஎம்டிஏ, சென்னை மாநகராட்சி கட்டிட அனும, ரீரா அனுமதியும் பெறப்பட்டது.

இந்த திட்டப்பகுதிக்கு மட்டுமல்ல கடந்த கால ஆட்சியில் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் சென்னை மூர்த்திங்கர் பகுதி-2 972 குடியிருப்பு, கிருஷ்ணகிரி பெல்லான குப்பம்- 144 குடியிருப்பு, திருவள்ளூர் அருங்குளம் பகுதி-1 460 குடியிருப்பு, அருங்குளம் பகுதி-2 944 குடியிருப்பு, அருங்குளம் பகுதி-3 780 குடியிருப்பு, திருநெல்வேலி ரெட்டியார்பட்டி பகுதி1ல்  480 குடியிருப்பு, ரெட்டியார்பட்டி பகுதி2. 768 குடியிருப்பு, மணலி புதுநகர் பகுதி4ல் 620 குடியிருப்பு, மணலி புதுநகர் பகுதி 5ல் 200 குடியிருப்பு, மணலி புதுநகர் பகுதி6ல் 440 குடியிருப்பு, சீனிவாசபுரம் 480 குடியிருப்பு, திருவள்ளூர் முருகப்பட்டு 1040 குடியிருப்புகள் , பெரும்பாக்கம் 3028 குடியிருப்புகள் மற்றும் கார்கில் நகர் 1200 குடியிருப்பு தொடங்கப்பட்டதால் குடியிருப்புகளை முழுமையாக முடிக்க முடியாத சூழ்நிலை இருந்தது.

முதல்வர் பொறுப்பேற்ற பின் 31,197 குடியிருப்புகள் கொண்ட 48 திட்டப் பகுதிகளுக்கு சுற்றுச்சூழல், சிஎம்டிஏ, ரீரா போன்ற அனுமதிகள் பெற்று வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் ம.கோவிந்த ராவ், ராயபுரம் எம்எல்ஏ ஆர். மூர்த்தி, வாரிய தலைமை பொறியாளர் ச.சுந்தரமூர்த்தி, நிர்வாகப் பொறியாளர் எஸ்.சுடலை முத்துக்குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

Related Stories: