×

எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் முதல்வர் பிறந்த நாளில் 1000 பேருக்கு பிரியாணி

பெரியபாளையம்: திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு, பெரியபாளையம் பேருந்து நிலையம் அருகே நேற்று எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் பிஜே.மூர்த்தி தலைமையில் கட்சிக்கொடி ஏற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் மதிய உணவாக ஏழை-எளிய உள்ளிட்ட 1000. பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது. பின்னர், குமரப்பேட்டையில் 100க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், பேனா, பென்சில் உள்ளிட்ட எழுதுபொருட்களை ஒன்றிய செயலாளர் மற்றும் நிர்வாகிகள் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி ரவிக்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கே.வி.லோகேஷ், மாவட்ட கவுன்சிலர் சித்ரா முனுசாமி, மாவட்ட வர்த்தக அணி பிரிவு தனசேகரன், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சீனிவாசன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சங்கர், வடக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் வடமதுரை அப்புன், ராஜா, குமரப்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், நெசவாளர் அணி ஈஸ்வர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் கன்னிகைபேர், கோட்டகுப்பம், மஞ்சங்கரணை, அழிஞ்சிவாக்கம், நெய்வேலி, திருக்கண்டலம், அக்கரபாக்கம், ஆகிய கிராமங்களில் ஒன்றிய செயலாளர் ஆ.சக்திவேல் தலைமையில் கட்சிக்கொடி ஏற்றி, அப்பகுதி மக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானங்கள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட வழக்கறிஞர் அமைப்பாளர் தேவேந்திரன், மாவட்ட பிரதிநிதி வெங்கடாசலம், ஊராட்சி மன்ற தலைவர் மதன், ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Biryani ,Chief Minister ,Ellapuram North Union DMK , Biryani for 1000 people on Chief Minister's birthday on behalf of Ellapuram North Union DMK
× RELATED பிரியாணியில் மண்; தட்டிக்கேட்ட தொழிலாளி வெட்டிக்கொலை