உலகளவில் அனைவராலும் நேசிக்கப்படும் தலைவராக பிரதமர் மோடி விளங்குகிறார்: இத்தாலி பிரதமர் மெலோனி

டெல்லி: டெல்லி வந்த இத்தாலி பிரதமர் மெலோனி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார். பிரதமர் துவக்கிவைத்த ரெய்சினா 2023 பேச்சுவார்த்தையில் சிறப்பு விருந்தினராக இத்தாலி பிரதமர் பங்கேற்றுள்ளார். பின்னர், டெல்லி ஐதராபாத் இல்லத்தில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில், அரசியல், வர்த்தகம் மற்றும் பொருளாதாரம், பாதுகாப்பு, அறிவியல் மற்றும் சுகாதாரம், தூதரக மற்றும் கலாசார விவகாரங்கள் பற்றி விரிவான செயல்திட்டங்களை பற்றி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டு உள்ள தகவல் தெரிவிக்கின்றது. எரிசக்தி, ஹட்ரஜன். தகவல் தொழில்நுட்பத் துறைகளில் இத்தாலியுடனான உறவு மேலும் வலுப்படும் என பேச்சுவார்த்தையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த சந்திப்பில் பேசிய இத்தாலி பிரதமர் மெலோனி; உலகளவில் அனைவராலும் நேசிக்கப்படும் தலைவராக பிரதமர் மோடி விளங்குவதாகவும், உக்ரைன் போர் பேச்சுவார்த்தையை எளிதாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என நம்புகிறோம் என்று தெரிவித்தார். மேலும், இந்தியா- இத்தாலி இடையேயான உறவை மேலும் பலப்படுத்துவதே எங்கள் நோக்கம் என அவர் கூறினார். பின்னர், பயங்கரவாதம், பிரிவினைவாதத்திற்கு எதிராக இந்தியா, இத்தாலி தோளோடு தோள் நிற்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உக்ரைன் பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்றும், இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தித் துறையில் இரு நாடுகளுக்கும் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உள்ளன என்றும் தெரிவித்தார்.

Related Stories: