வடகிழக்கு மாநில தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது: காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேட்டி

சென்னை: வடகிழக்கு மாநில தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதல்முறையாக மல்லிகார்ஜுன கார்கே சென்னை வருகை தந்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் புறப்படும் முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைய பல தலைவர்கள் விரும்புவதாகவும் கூறினார். செய்தியாளர்களுக்கு மல்லிகார்ஜுன கார்கே அளித்த பேட்டியில், வடகிழக்கு மாநில தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.

திரிபுரா, மேகலாயா, நாகலாந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி குறைவான தொகுதிகளிலேயே போட்டியிட்டது. இந்த வடகிழக்கு மாநிலங்கள் பொதுவாக மத்தியில் இருக்கும் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும். ஆனால் பல தலைவர்கள் தேசிய அரசியலில் ஆர்வம் கொண்டுள்ளனர். அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்கின்றனர். அவர்கள் மதசார்பற்ற கட்சிகளை ஆதரிக்கிறார்கள். அவர்கள் ஜனநாயகத்தையும், அரசமைப்பையும் ஆதரிக்கிறார்கள். அத்தகையவர்கள், கூட்டணியுடன் இணைந்து ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி முன்வர வேண்டும் என நினைக்கிறார்கள் என்று கூறினார்.

Related Stories: