×

2017 ஆர்கேநகர் இடைத்தேர்தல் டூ 2023 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ... எடப்பாடி பழனிசாமிக்கு தொடர் தோல்விகள் ; அதிமுகவின் பரிதாப நிலை!!

ஈரோடு : ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. அதிமுக கடும் பின்னடைவை சந்தித்துள்ளதால் அதிமுக தலைமை அலுவலகம் வெறிசோடியது. வாக்கு எண்ணும் மையங்களில் அதிமுகவை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் நிற்கவில்லை. இதைத் தொடர்ந்து, விரக்தியுடன் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து அதிமுக வேட்பாளர் தென்னரசு வெளியேறினார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தோல்வி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் இடியாக இறங்கியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் இது அதிமுக சந்தித்த 8வது தோல்வி ஆகும். அதிமுக. 2016ம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், சொத்துகுவிப்பு வழக்கில் வி.கே.சசிகலா சிறை சென்றதையடுத்து 2017-ல் அ.தி.மு.க-வின் சட்டமன்ற கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக முதல்வராகப் பதவியேற்றார் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி வசம் அதிமுக வந்த பிறகு தொடர்ச்சியாக தேர்தல் தோல்விகளை சந்தித்து வருகிறது

1. 2017 ஆர்கேநகர் இடைத் தேர்தல்.
2. 2019 நாடாளுமன்ற தேர்தல்.
3. 22 சட்டசபை தொகுதிகளின் இடைத் தேர்தல்.
4. ஊரக உள்ளாட்சி தேர்தல்.
5. 2021 சட்டமன்ற தேர்தல்.
6. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்.
7. நகர்புற உள்ளாட்சி தேர்தல்.
8. ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்.

இப்படி எட்டு தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைந்திருக்கிறது.

Tags : Arkanagar Intermediation Two 2023 ,Erode East Intermediation ,Edapadi Palanisami , Arknagar, by-election, Erode, East
× RELATED நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்...