திரிபுரா, நாகலாந்து மாநிலங்களில் ஆட்சியை தக்க வைக்கிறது பாஜக கூட்டணி!

அகர்தலா : திரிபுரா, நாகலாந்து மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சியை தக்க வைக்கிறது.பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட கூடுதல் இடங்களை பிடித்துள்ளது.

திரிபுராவில் பாஜக கட்சி!!

60 தொகுதிகளை கொண்ட திரிபுரா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் கடந்த 16ம் தேதி நடந்தது. இதில் 80% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதில் ஆளும் பாஜக - திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி கூட்டணி 30 இடங்களுக்கு மேல் முன்னிலை வகிக்கிறது. தற்போதைய நிலவரப்படி

பாஜக+ 33

சிபிஎம்+16

திப்ரா மோத்தா : 10

மற்றவை : 1

*திரிபுரா தேர்தலில் பா.ஜனதா கட்சி மாநில கட்சியான ஐ.பி.எப்.டி. எனப்படும் திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி என்ற கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது.

*இதுவரை எதிர்எதிராக களத்தில் நின்ற காங்கிரசும், கம்யூனிஸ்டும் இந்த தேர்தலில் பா.ஜ.வை வீழ்த்துவதற்காக கூட்டணி அமைத்துள்ளன.

நாகாலாந்திலும் பாஜக ஆட்சி!!

திரிபுராவை தொடர்ந்து நாகாலாந்திலும் பாஜக ஆட்சி அமைகிறது. 60 தொகுதிகள் உள்ள நாகாலாந்தில் அகுலுடோ தொகுதியில் பாஜக வேட்பாளர் கஜேடோ கினிமி போட்டியின்றி தேர்வானார். இதையடுத்து கடந்த பிப்ரவரி 27ம் தேதி 59 தொகுதிகளில் தேர்தல் நடந்தது.இந்த நிலையில் பிப்ரவரி 27ம் தேதி பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, பாஜக 36 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 2 இடங்களிலும் நாகா மக்கள் முன்னணி கட்சி 2 இடங்களிலும் பிற கட்சிகள் 20 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. இதன் மூலம் நாகாலாந்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பது கருத்து கணிப்பில் சொன்னது போல உறுதி ஆகியுள்ளது.

Related Stories: