×

மேகாலயா சட்டப்பேரவை தேர்தல் :எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பு!!

ஷில்லாங் : மேகாலயா சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், எந்த கட்சிக்கும் அங்கு பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு சட்டசபை அமைவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேகாலயா மாநிலத்தில் பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடந்தது. மேகாலயாவில் சோகியோங் தொகுதியில் போட்டியிட்ட ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் இறந்ததால் அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து எஞ்சிய 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. மேகாலயாவில் பலமுனைப் போட்டி நிலவி வந்தது. இங்கு ஆளும் தேசிய மக்கள் கட்சியை (என்பிபி) எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ், பாஜ, காங்கிரஸ், ஐக்கிய ஜனநாயக கட்சி (யுடிபி) கட்சிகள் போட்டியிடுகின்றன.  

இங்கு காங்கிரஸ், பாஜ கட்சிகள் 59 தொகுதிகளிலும், என்பிபி 56 தொகுதிகளிலும், திரிணாமுல் காங்கிரஸ் 57 தொகுதிகளிலும் யுடிபி கட்சி 46 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இந்த நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. அதில் ஆளுங்கட்சியான தேசிய மக்கள் கட்சி 27 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி தலா 5 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. மற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 22 இடங்களில் முன்னிலையில் உள்ளது.  எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் அங்கு தொங்கு சட்டசபை அமைவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.


Tags : Meghalaya Legislation Election ,Hanging , Meghalaya, Assembly, Election
× RELATED சாவ்லா பாலியல், கொலை வழக்கு...