விருதுநகர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கலெக்டர் ஆய்வு

விருதுநகர்: விருதுநகர் நகராட்சி மூலம் மாத்துநாயக்கன்பட்டியில் செயல்படும் நுண் உர செயலாக்க மையம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், உயிர் நொதித்தல் மைய செயல்பாடுகளை கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டார். இங்குள்ள நுண் உர மையத்தில் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளில் தரம் பிரித்து, மக்கும் குப்பைகளை இயந்திரத்தில் அரவை செய்து தொட்டில் காய வைத்து உரமாக மாற்றும்பணியை பார்வையிட்டார்.

மேலும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய செயல்பாடுகளை ஆய்வு செய்து பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கினார். உயிர் நொதித்தல் மையத்தில் குப்பைகளில் கலந்துள்ள நெகிலி, இரும்பு, துணிகளை பிரித்தெடுக்கும் பணியை பார்வையிட்டார். ஆய்வில் ஆணையர் ஸ்டான்லி பாபு உள்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: