சென்னை கொருக்குப்பேட்டையில் பாஜக மகளிர் அணி நிர்வாகி வீட்டுக்குள் மது போதையில் நுழைந்த 2 காவலர்கள் சஸ்பெண்ட்..!!

சென்னை: சென்னை கொருக்குப்பேட்டையில் பாஜக மகளிர் அணி நிர்வாகி தேவி வீட்டுக்குள் மது போதையில் நுழைந்த காவலர்கள் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். வடசென்னை கிழக்கு மாவட்ட பாஜக மகளிர் அணி செயலாளராக இருப்பவர் தேவி. அவருடைய வீட்டுக்குள் மது போதையில் காவலர்கள் 2 பேர் நுழைந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இரவு பணியில் இருந்த காவலர் பாலாஜி, காவலர் பரித் ராஜா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

காவலர்கள் இருவரையும் பணியிடைநீக்கம் செய்து வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் பவன்குமார் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். காவலர்களுக்கு துணையாக சென்ற ஊர்க்காவல் படை வீரர் கிரண் என்பவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர். பாஜக மகளிர் அணி நிர்வாகி தேவி வீட்டுக்குள் மது போதையில் நுழைந்த காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: