×

திரிபுராவை தொடர்ந்து நாகாலாந்திலும் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக!!

கோஹிமா : திரிபுராவை தொடர்ந்து நாகாலாந்திலும் பாஜக ஆட்சி அமைகிறது. 60 தொகுதிகள் உள்ள நாகாலாந்தில் அகுலுடோ தொகுதியில் பாஜக வேட்பாளர் கஜேடோ கினிமி போட்டியின்றி தேர்வானார். இதையடுத்து கடந்த பிப்ரவரி 27ம் தேதி 59 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இங்கு, ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியுடன் (என்டிபிபி) பாஜ கூட்டணி அமைத்து போட்டியிட்டது. நாகா மக்கள் முன்னணியுடன் (என்பிஎப்) காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. இம்மாநிலத்தில் மொத்தம் 81.94 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்த நிலையில் பிப்ரவரி 27ம் தேதி பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, பாஜக 37 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 2 இடங்களிலும் நாகா மக்கள் முன்னணி கட்சி 9 இடங்களிலும் பிற கட்சிகள் 12 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. இதன் மூலம் நாகாலாந்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பது கருத்து கணிப்பில் சொன்னது போல உறுதி ஆகியுள்ளது.



Tags : Nagaland ,Bajaka , Tripura, Nagaland, Government, BJP
× RELATED அதிகரிக்கும் அதிருப்தி… உட்கட்சி...