மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை மருத்துவ கழிவுகளை சுத்திகரிப்பு நிலையத்திடமே ஒப்படைக்க வேண்டும்

சென்னை: மாசு கட்டுப்பட்டு வாரியம் விடுத்துள்ள அறிக்கை:

 மருத்துவமனைகளிலிருந்து உருவாகும் மருத்துவ கழிவுகள் முறையாக பிரித்து, சேமித்து, பொது மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையத்திடம் சுத்திகரிப்பு செய்வதற்காக ஒப்படைக்க வேண்டும்.

வீடுகள், விடுதிகள், முதியோர் இல்லங்கள் போன்றவற்றிலிருந்து உருவாகும் காலாவதியான மருந்துகள், உடைந்த பாதரச வெப்பமானிகள், பயன்படுத்தப்பட்ட ஊசிகள் மற்றும் சிரிஞ்ச்கள் மற்றும் அசுத்தமான கேஜ் போன்றவை, திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016ன் படி, ‘‘வீட்டு அபாயகரமான கழிவுகள்’’ என வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த கழிவுகளை முறையாக சேமித்து பொது மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையத்திடம் ஒப்படைக்க வேண்டும். இந்த விதிகளை பின்பற்றாமல் மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: