வாச்சாத்தி மலை கிராமத்தில் 4ம் தேதி நீதிபதி விசாரணை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி மலை கிராமத்தில் 20.6.1992ல் வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் சோதனை நடத்தியபோது 18 பெண்கள் பாலியல் ரீதியான வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த தர்மபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் 2011ல் அளித்த தீர்ப்பில் ஐஎப்எஸ் அதிகாரிகள் உள்பட 17 வனத்துறையினரில் 12 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 5 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் விதித்தது.

மற்றவர்களுக்கு ஓராண்டு முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாச்சாத்தி மலை கிராமத்திற்கு நீதிபதி நேரடியாக வரும் 4ம் தேதி சென்று விசாரணை நடத்த உள்ளார்.

Related Stories: