ரயில் விபத்தில் இருந்து தப்பிய மக்னா யானை வீடியோ வைரல்

கோவை: கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சுமார் 100 கிலோ மீட்டர் தூரம்  சுற்றி மக்களை கதி கலங்க வைத்த மக்னா யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை அடுத்த மானாம்பள்ளி வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. முன்னதாக மதுக்கரை அருகே ரயில் தண்டவாளத்தில் அந்த மக்னா யானை நின்றுள்ளது.  அப்போது அவ்வழியாக அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு ஓசை எழுப்பவே, மக்னா யானை தண்டவாளத்தில் இருந்து இறங்கி உயிர் தப்பியது. இதை சிலர் வீடியோ எடுத்துள்ளனர். அது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Related Stories: