×

பறவை மோதியதால் விமான இன்ஜின் பழுது 220 பயணிகள் அவதி

திருச்சி: பறவை மோதியதால் விமான இன்ஜின் பழுதானது. இதனால் 220 பயணிகள் அவதிப்பட்டனர். திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு வரவேண்டிய ஏர்ஏசியா விமானம் 2 மணி நேரம் தாமதமாக நேற்று அதிகாலை 2 மணிக்கு வந்தது. அங்கு காத்திருந்த 220 பயணிகளை ஏற்றிக்கொண்டு விமானம் மீண்டும் 4 மணிக்கு கோலாலம்பூர புறப்பட தயாரானது.

அப்போது விமானத்தின் இறக்கையில் பறவை மோதியதால் இன்ஜினில்  கோளாறு ஏற்பட்டது. உடனடியாக பயணிகள் இறக்கி விடப்பட்டனர். கோளாறு சரி செய்யப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் மாலை 4 மணிக்கே விமானம் புறப்பட்டது. 16 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்ததால் கடும் அவதி அடைந்த பயணிகளுக்கு, விமான நிலைய பணியாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Tags : Bird strike, plane engine repair, 220 passengers suffering
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...